Blogger created for serving to god through Whatsapp. Gods child's can copy and share blog messages through Whatsapp. Praise the Lord. Amen Amen Amen....!!!

12 Jun 2018

இன்றைய தியானம்

இன்றைய தியானம் 13-06-2018 (Bible Special)

“. .. இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”  - சங்கீதம் 1:2   

வேதத்தில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன?  என்று கேட்டால், ஒரு வேளை நீங்கள் இரவும், பகலும் எண்ணி சொல்லிவிடுவீர்கள்.  ஆனால் வேதத்தில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்று கேட்டால் திகைத்துப்போவீர்கள்.  உதாரணமாக, தமிழ் வேதாகமத்தில் முதலாம் சங்கீதம், முதல் வசனத்தில் மட்டும் 62 எழுத்துக்கள் இருக்கின்றன.  முழு வேதாகமத்திலும். . . . ?

ஒரு இளவரசன் எண்ணி முடித்தார்.  பழைய ஏற்பாட்டில் 27,28,100 எழுத்துக்களும், புதிய ஏற்பாட்டில் 8,38,380 எழுத்துக்களும், மொத்தம் 35,66,480 எழுத்துக்களும் இருக்கின்றன என எண்ணி முடித்தார்.  யார் இந்த இளவரசன்?  அவர் ஸ்பானிய தேசத்து இளவரசன்.  அவர் தேவபக்தியுள்ளவராகவும், கல்வாரி அன்பினால் நிறைந்தவராகவும் இருந்தார்.  அந்தோ! திடீரென்று இராணுவப் புரட்சி வெடித்தது.  இராணுவ தளபதி, ஆட்சியைக் கைப்பற்றி இளவரசனை சிறையில் தள்ள உத்தரவிட்டான்.  இதை அறிந்த இளவரசன் தன் அறைக்குள் ஓடி வேதத்தை எடுத்து, அதை தன் சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.  சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

நாட்களும், மாதங்களும், வருடங்களும் நத்தை வேகத்தில் நகர்ந்து 33 ஆண்டுகள் கடந்தன.  கடைசியில் அவர் ஆத்துமா, அவர் சரீரத்தினின்றும், சிறையிலிருந்தும் விடை பெற்றுக் கொண்டது.  அவரை அடக்கம் செய்யும்படி அறைக்குள் வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், ஒரு பழைய ஆணியைக் கொண்டு அந்த இளவரசன் எழுதி வைத்த வேதாகமக்குறிப்புகள்தான்.  வேதத்திலிருக்கும் வசனங்கள் எத்தனை, வார்த்தைகள் எத்தனை, எழுத்துக்கள் எத்தனை என்று எல்லாமே அங்கே செதுக்கப்பட்டிருந்தன.  மட்டுமல்ல, வேதத்தின் மத்திய வசனம், மிகச்சிறிய வசனம், கர்த்தர் என்று வரும் இடங்கள், ஒன்று போல் இருக்கும் வசனங்கள் என்று எத்தனையோ அரும்பெரும் வேத ஆராய்ச்சிகளை அந்த அறையில் ஆங்காங்கே ஆணியால் எழுதி வைத்திருந்தார்.  சிறையில் 33 ஆண்டுகள் அவர் செய்த காரியம் இதுவே!

தேவனுடைய பிள்ளைகளே! இந்த இளவரசன் நம் எல்லோருக்கும் ஒரு முன் மாதிரியல்லவா?  நாம் தனிமையாய் இருக்கும் நேரத்தை வேதத்துடன் செலவிட விரும்புகிறோமா?  வேத தியானம் நமக்கு இனிமையாயிருக்கிறதா? வேதம் நமக்கு இனிமையாயிருக்குமென்றால், அதிலுள்ள அதிசயங்களைக் காணும்படி இன்னும் அதை ஆராய்ச்சி செய்து, வசனத்தின் ஆழத்தை அறிய நாம் தோண்டிக் கொண்டேயிருப்போம்.  இல்லையென்றால் பெயருக்காகவும், கடனுக்காகவும் ஒரு அதிகாரத்தை வாசித்துவிட்டு திருப்தி கண்டிடுவோம்.  நமது வேத தியானம் எப்படி என்று சிந்திப்போம்.  வேதத்தை வாஞ்சையோடு, தாகத்தோடு வாசிப்போம்.  அது நம்மோடு பேசும்.  ஏனெனில் வேதவசனம் ஜீவனுள்ளது.


ஜெபக்குறிப்பு:
பணித்தளம் மாறுதல் ஆகி சென்றுள்ள நமது மிஷனெரிகளை தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.


இன்றைய விசுவாசம்

*இன்றைய விசுவாசம்.*

பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்கு சொல்லியும்  நீங்கள்  *விசுவாசிக்கவில்லை யே*  பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி  *விசுவாசிப்பீர்கள்?*

சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்,

தன்னை  *விசுவாசிக்கிறவன்* எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடை யும்படிக்கு,உயர்த்தப்படவேண்டும்.

தேவன்,தம்முடை ய ஒரே பேறான குமாரனை  *விசுவாசிக்கிறவன்* எவனோ அவன் கெட்டுப்போகாமல்  நித்தியஜீவனை அடை யும் படிக்கு அவரை த் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

உலகத்தை ஆக்கினை க்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடை ய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

அவரை  *விசுவாசிக்கிறவன்* ஆக்கினை க்குள்ளாகத் தீர்க்கப்படான்;  *விசுவாசியதவனோ*  தேவனுடை ய ஒரே பேறான குமாரனுடை ய நாமத்தில்  *விசுவாசமுள்வனாயிராதபடியினால்* அவன் ஆக்கினை த்தீர்ப்புக்குட்பட்டாயிற்று

*யோவான்.3:12,14-18*

Praise the Lord.
Good morning.

Amen!!

*JESUS IS STRENGTH*
13.06.2018.

DAILY BREAD🍞

🍞🍞DAILY BREAD🍞🍞
                  13/06/2018
                Jeremiah 1:4-6
[4] Then the word of the Lord came unto me, saying, [5] Before I formed thee in the belly I knew thee; and before thou camest forth out of the womb I sanctified thee, and I ordained thee a prophet unto the nations. [6] Then said I, Ah, Lord God ! behold, I cannot speak: for I am a child.
 🌹🌹Lord has created and and called you out of the darkness into his marvellous light, before you were born, God has chosen and picked you🌹🌹
✨PEOPLE MAY DISSAPOINT, GOD WILL APPOINT YOU✨
👏 Heavenly Father thanking for new day and new Grace that showered upon us, Lord thank you for choosing me and appointing for your work to built your kingdom in Jesus name.AMEN👏

அன்றன்றுள்ள அப்பம்

*அன்றன்றுள்ள அப்பம்* 


*பொல்லாத ஆவி!* 

*"கர்த்தருடைய ஆவி, சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது"* (1 சாமு. 16:14). 

கர்த்தருடைய ஆவியானவர், இனிமையானவர். சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டு வருகிறவர். கர்த்தர் மனுக்குலத்திற்குக் கொடுத்த எல்லாப் பாக்கியங்களிலும் பெரிய பாக்கியம், பரிசுத்த ஆவியானவர். ஆனால், அவருக்குக் கீழ்ப்படியாமல், அவர் சொன்னதை நிறைவேற்றாமல், ராஜாவாகிய சவுல் முரட்டாட்டம் பண்ணினபோது, முடிவில் கர்த்தர் தாமே தமது ஆவியை, சவுலை விட்டு நீங்கச் செய்தார். 

மட்டுமல்ல, கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி, அவனைக் கலங்கப் பண்ணிக் கொண்டிருந்தது. அந்த ஆவி சவுலைப் பிடிக்க, கர்த்தர் அனுமதி யளித்து விட்டார். அது முதலில் சவுலைக் கலங்கப்பண்ணிற்று. இனம் புரியாத ஒரு கலக்கம். என்ன நடக்குமோ? என்கிற கலக்கம். எதிர்காலத்தைக்குறித்த ஒரு கலக்கம்.

பழைய ஏற்பாட்டில், அசுத்த ஆவிகளையோ, பொல்லாத ஆவிகளையோ, துரத்தினதாக, வாசிக்கவே முடியாது. பலத்த அற்புதங்களைச் செய்த மோசே, ஒரு அசுத்த ஆவியைக்கூடத் துரத்தினதில்லை. வல்லமையாய் எழுந்து பிரகாசித்த எலியாவாகட்டும், எலிசாவாகட்டும், ஒரு பிசாசையும் துரத்தினதில்லை. மாபெரும் தீர்க்கதரிசிகளாய் விளங்கின ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகிய தீர்க்கதரிசிகள்கூட, ஒரு பிசாசையும் துரத்தினதில்லை. 

முதன் முதல், பொல்லாத ஆவிகளைத் துரத்தினவர், இயேசு கிறிஸ்து. அவர் நோய்களையும் கொடிய வியாதிகளையும், பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகம் குருடருக்குப் பார்வையளித்தார் (லூக். 7:21). மட்டுமல்ல, அசுத்த ஆவிகளைத் துரத்துகிற வல்லமையையும், அதிகாரத்தையும் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார் (லூக். 10:19; மத். 10:1).

சவுலுக்குப் பொல்லாத ஆவி பிடித்தபோது, அவருடைய ஆலோசகர்கள் என்ன சொன்னார்கள்? "சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர், உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்கு கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி, உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால், உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்" (1 சாமு. 16:16). 

பழைய ஏற்பாட்டில், அசுத்த ஆவிகளைத் துரத்த வேண்டுமென்றால், தேவ பிரசன்னம் அங்கே இறங்க வேண்டும். தேவ பிரசன்னம் இறங்க வேண்டுமென்றால், சுரமண்டலம் வாசிக்கிற ஒருவன் கர்த்தரைப் பாடித்துதித்து, மகிமைப்படுத்தி ஆராதனை செய்ய வேண்டும். அப்பொழுது சவுக்கியம் உண்டாகும். 

தேவபிள்ளைகளே, பொல்லாத ஆவிகளைத் துரத்துகிற அதிகாரத்தைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் விசுவாசிகளையும் பாதுகாக்க முடியும். அப். பவுலைக்குறித்து, நாம் என்ன வாசிக்கிறோம். "அவனுடைய சரீரத்திலிருந்த உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல், போட வியாதிகள் அவர்களை விட்டு நீங்கி, பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன" (அப். 19:12). நீங்களும் இயேசுவின் நாமத்தில், பிசாசுகளைத் துரத்துங்கள் (மாற்கு 16:17). 

நினைவிற்கு :- *"இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங் களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு"* (எபேசி. 6:12). 

சகோ. J. சாம் ஜெபத்துரை.

*ஓராண்டில் வேதாகமம் -*
காலை .. எஸ்றா 3, 4, 5
மாலை .. யோவான் 20.   


*ANTRANTULLA APPAM* 
JUNE 12, TUESDAY, 2018.

*DISTRESSING SPIRIT!* 

*"But the Spirit of the Lord departed from Saul, and a distressing spirit from the Lord troubled him”* (1 Samuel 16:14). 

The spirit of the Lord is a sweet one. He brings peace and joy. The Holy Spirit is the best of all the blessings given to mankind by God. When King Saul was so stubborn in not obeying God and not fulfilling what he had already promised, God himself removed His spirit from Saul in the end. 

Further, a spirit was troubling him. God had allowed that spirit to catch hold of Saul. Initially, it made Saul scare and then an experience of inexplicable distress and a fear over the future came to him. 

In the Old Testament, there is no instance of casting dirty or wicked spirits. Moses had done several miracles but we never read anywhere in the Scripture about Moses casting any spirit. May it be Elijah who rose and shined powerfully or Elisha, they never cast out a demon. Isaiah, Jeremiah and Ezekiel were great prophets but had not cast out a single spirit.   

Jesus Christ was the first to cast out spirits. He cured many of infirmities, afflictions, and evil spirits; and He gave sight to many blind (Luke7:21). Not only that. He gave his disciples, the power over unclean spirits, to cast them out and to heal all kinds of sickness and all kinds of diseases (Matthew 10:1). 

What did the counsellors of Saul say when he was stricken by the wicked spirit? “Let our master now command your servants, who are before you, to seek out a man who is a skilful player on the harp. And it shall be that he will play it with his hand when the distressing spirit from God is upon you, and you shall be well” (1 Samuel 16:16). 

In the Old Testament, if a spirit had to be cast out, the presence of God had to descend there. If the presence of God had to descend, one who plays the harp will have to worship God by singing His praise and glorify Him. Then, there will be health. 

Dear children of God, God has given you the power to cast out the evil spirits. Through this you can protect yourself, your family and the believers. What do we read about Paul the Apostle?  “….so that even handkerchiefs or aprons were brought from his body to the sick, and the diseases left them and the evil spirits went out of them” (Acts 19:12). And these signs will follow those who believe: In my name, they will cast out demons; they will speak with new tongues; (Mark 16:17). 

To meditate : *"For we do not wrestle against flesh and blood, but against principalities, against powers, against the rulers of the darkness of this age, against spiritual hosts of wickedness in the heavenly places”* (Ephesians 6:12). 

Bro J. Sam Jebadurai.

ஜெபக்குறிப்புகள்

*ஜெபக்குறிப்புகள்*
🙏            👏        🙏

*தேவபிள்ளைகளின்*இரட்சிப்பிற்காக*ஜெபிப்போம்*👏🔥

1.இரட்சிக்கப்பட்டவர்கள் விசுவாசத்தின்
இரகசியத்தை சுத்த
மனசாட்சியில்

காத்துக் கொண்டவர்களாய்
இருக்க ஜெபிப்போம்.

2.தேவனுடைய
அன்பினாலே தங்களைக் காத்துக்
கொள்கின்றவர்களாய் இருக்க ஜெபியுங்கள்.

3.விக்கிரகங்களுக்கு
விலகி தங்களை
காத்துக் கொள்ள
ஜெபிப்போம்.

4.சமாதான கட்டினால்
ஆவியின் ஒருமையைக் காத்துக்
கொள்ள ஜெபிப்போம்.

5.தேவனுடைய
வார்த்தையைக் கேட்டு அதின்படி
நடக்கின்றவர்களாய்
இருக்க ஜெபிப்போம்.

*ஆமென்🙏ஆமென்*🙏




மனதில் பட்டவை* 🌿

💡 *மனதில் பட்டவை* 🌿

லூக்கா 18:18 ல் தலைவன் ஒருவன் இயேசுவை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்யவேண்டும் என்று கேட்டான்.

இவன் சரியான கேள்வியை சரியான நபரிடம் தவறான முறையில் கேட்கிறான்.ஏனெனில் *நன்மை செய்வதினால் நித்தியஜீவனை பெறலாம் என நினைத்தான்.* 

நாம் நன்மை செய்வதினால் நித்தியஜீவன் வருமெனில்,கிறிஸ்து சிலுவையில் பாடுபடவேண்டிய அவசியமில்லையே.

 *நித்தியஜீவன் என்பது தங்களுடைய நற்கிரியைகளின் வழியாய் அல்ல, இயேசுவை விசுவாசிப்பதின் வழியாய் இலவசமாக வருவது.* 

💁🏻‍♂

இன்றைய தியானம் : 12:06:201

*இன்றைய தியானம் : 12:06:2018*
*கர்த்தர் இயேசுவின் இரண்டாம்(பகிரங்க) வருகையும் நியாயத்தீர்ப்பும் POST - 1*
*ஆசிரியர் முன்னுரை:-*

*"அவர் (இயேசு) வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்." சங்கீதம் 96:13*

        *"ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்." (2கொரிந்தியர் 5:10)*

      *"இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்." வெளி 1:7.* 

        *கர்த்தருடைய வேதாகமம், தேவத்திட்டங்களை மனுக்குலத்திற்கு திட்டமும் தெளிவுமாக அறிவிக்கிறதாய் இருக்கிறது. அந்தந்தக்கால ஆவிக்குரிய வெளிச்சத்தின்படி வாழ்ந்து பூரண பரிசுத்தவான்களானவர்களை தேவன் தன்னோடு சேர்த்துக் கொண்டார். "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார்." ஆதியாகமம் 5:24 "அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது, எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்." 2 இராஜாக்கள் 2:11.*

         *அந்தந்த வேதாகம காலங்களில் வெளிப்பட்ட தேவனுடைய கட்டளைகள் கற்பனைகளைக் கைக்கொள்ளாதவர்களை தேவன் நியாயந்தீர்த்தார். "உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்." ஆதியாகமம் 4:11. "பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான். " 2 இராஜாக்கள் 5:26,27. இவ்வசனங்களின் படி காயினும், கேயாசியும் நியாயந்தீர்க்கப் பட்டார்கள்.*

           *கிருபையின் கால தேவ ஆவியானவரும் வாக்கு பண்ணியிருக்கிறார்."ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.  பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1தெசலோனிக்கேயர் 4:16,17.*

         *"இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." வெளி 22:12*

           *தேவனுடைய பிள்ளைகளே, வேதாகம காலங்களாகிய மனசாட்சி, நியாயப்பிரமாணம், கிருபையின் காலம் ஆகிய எக்காலமானாலும் அந்தந்த காலங்களில் வாழ்ந்த பூரண பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொண்டும், பாவிகளை நியாயந்தீர்த்து தண்டிக்கிறதையும் காண்கிறோம். கிருபையின் காலம் முடியும் வேளையில் இக்கால பரிசுத்தவான்களை உலகம் அறியாத நிலையில் தேவ எக்காளத்தோடு இரகசியமாய் திருடனைப் போல ஆகாய மட்டும் வந்து தன்னோடு சேர்த்துக் கொள்ளப்போகிறார்.*

       *ஆயிரவருட அரசாட்சி, அதன் பின்பு சாத்தானின் கொஞ்ச காங்கிரஸ் ஆட்சி, உறுதியான அர்மகெதோன் யுத்தத்தில் தேவாதி தேவனாகிய இயேசு பாவிகளை நிநாயத்தீர்ப்புச் செய்யும் நியாயாதிபதியாய் வந்து சாத்தான், பூமி, வானம், சமுத்திரம், மரணம், பாதாளம் யாவற்றையும் நியாயந்தீர்த்து, "பாவிகளை இரண்டாம் மரணமாகிய அக்கினிக்கடலிலே தள்ளிப்போட (வெளி.20:14) உலகத்தின் இறுதி இமைப்பொழுதில் வரப் போகிறார்.*

        *ஆண்டவரின் இரண்டாம் வருகை யானது,  மரித்த பாவிகளை நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாகவே வரும் வருகையாக இருக்கப் போகிறது. ஏனென்றால் அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு இறுதியில் நடந்த "இரகசிய வருகை" , பூமியில் வாழ்ந்த பூரண பரிசுத்தவான்கள் யாவரையும் மணவாட்டியாய் தன்னோடு சேர்த்துக் கொண்டு விட்டார். ஆகையால் பூமியில் வாழ்கிற யாவரும் பாவிகளே.*

*இந்தப் பாவிகளை நியாயந்தீர்க்க வரும் இயேசுவின் இரண்டாம் வருகையானது எத்தன்மை கொண்டதாக இருக்கும். பூமி,வானம்,சமுத்திரம், பாவிகள், மரணம், பாதாளம், யாவற்றின் நிலைகள் எப்படியிருக்கும். வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பிற்காக எழுந்திருக்கும் 6,7,உயிர்த்தெழுதல்கள், பாவிகளுக்கு கிடைக்கும் வித்தியாசமான தண்டனைகள். அக்கினிக்கடல், நித்தியம் யாவற்றையும் தேவத்திட்டங்களை வேத வசன ஆதாரங்களோடு தேவ ஆவியானவரால் அறிவிக்கப்பட்ட புஸ்தகமே, "கர்த்தர் இயேசுவின் இரண்டாம்(பகிரங்கை) வருகையும் நியாயத்தீர்ப்பும்," என்ற இப்புத்தகம்.*

              *ஆண்டவர் இயேசுவின் வருகைகளைக் குறித்து வேத பண்டிதர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் இக்கடைசிக்காலத்தில் கர்த்தருடைய வருகைகளாகிய."இரகசிய வருகை" "கர்த்தர் இயேசுவின் இரண்டாம் (பகிரங்க) வருகையும் நியாயத்தீர்ப்பும்", என்ற இரண்டு வருகைகளே உண்டு என்பதைக் குறித்த தேவத்திட்டங்களை வேதவசனங்களைக் கொண்டு ஆவியானவரின் உதவியால் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. வேதப்பண்டிதர்களிடையே காணும் வேறுபட்ட கருத்துக்களுக்கு இப்புத்தகம் தெளிவான தீர்வாக அமையும் என்று அன்பர் இயேசு கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன். ஆவிக்குரிய தேவனுடைய பிள்ளைகள் இப்புத்தகத்தை வாசித்து கடைசிக்கால தேவத்திட்டங்களை அறிந்து மணவாளன் இயேசுவை சந்திக்க பூரண பரிசுத்தமடைந்த மணவாட்டிகளாய் ஆயத்தப்பட அன்பின் ஆண்டவர் இயேசு அழைக்கிறார். இயேசுவே வாரும்! ஆமென். அல்லேலூயா!*

*கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலன் ,*
*I. ஆசீர்வாதம்*
*"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"*


|The WORD| *ராஜாவா? ராஜாதிராஜாவா?*

|The WORD| *ராஜாவா? ராஜாதிராஜாவா?*

ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். (எஸ்தர் 4:3 )

*ஆண்டவர் தமது ஜனங்களை எப்படியாவது காப்பாற்றுவது
நிச்சயம் . அதற்காக அவர் எப்படியாவது திட்டம் தீட்டுவார். அதற்கு, யாரை வேண்டுமானாலும், உபயோகப்படுத்துவார்!*

யூதகுலத்தை எப்படியாவது அடியோடு அழித்து விட்டால்,
மேசியா இவ்வுலகிற்கு வரமுடியாது என்று, ஆமான் போன்ற நபர்கள் மூலம் யூத வம்சம் அனைத்தையும் அழிக்க முயற்சித்தான் சாத்தான்!

அது போலவே இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது
ஹிட்லர் மற்றும் சிலர் மூலமாக சுமார் 60 லட்சம் யூதர்களை அழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் ஹிட்லர் இரண்டாவது
ஆமான் போல! மற்றவர்களை அழிக்க நாம் நினைத்தால் நாம் அழிந்து போவோம் என்பது நியதி! ஆமான் தான் வெட்டிய குழியில் தானே விழுந்தான்!

*ஒரு கோடி ஆமான்கள் வந்தாலும், ஒரே ஒரு எஸ்தரை கர்த்தர் முன்னமே ஆயத்தம் செய்திருப்பார்!* ராஜாவின் முத்திரை வைக்கப்பட்டாலும், ராஜாதி ராஜாவின் முத்திரையாகிய எஸ்தர், மூலமாக முடிவு மாறினது அல்லவா?

 அரசனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாதென ராஜாவின் முத்திரை வைக்கப்பட்டது என அறிந்தும் பரலோக ராஜாவை நோக்கி, முழங்கால்படியிட்ட தானியேலுக்குத் தெரியும் அல்லவா "எந்த ராஜா பெரியவர்" என்று! *முத்திரை வைத்த ராஜாவுக்கு நித்திரை போயிற்றே!* முத்திரைக்குக் காரணகர்த்தாக்கள் சிங்கங்களுக்கு இரையானார்களே! 

உலக ராஜாக்களின் முத்திரைகளைக் காட்டிலும், ராஜாதிராஜாவின் முத்திரையானது நம் முழங்கால்கள் வழியாக இன்றும் செயல்படும் அல்லவா? *நாம் உலக அரசாங்கங்களுக்கோ, அதிகாரங்களுக்கோ பயப்பட அல்ல, பரலோகத்தின் ராஜாதிராஜாவுக்கு பயன்படவே இருக்கிறோம்!* 

*தடைகள் வரும்போது, தேவதூதர் படைகளும் அனுப்பப்படுமே!* ஆமென்!
_______________

King or King of Kings?

Esther:4:3 – “And in every province where the king’s command and decree arrived, there was great mourning among the Jews, with fasting, weeping, and wailing; and many lay in sackcloth and ashes.”

It is certain that God shall somehow defend His people. To do so, he shall somehow design plans! And he uses anyone for this cause!

Knowing that 'if somehow the Jewish community is ruined, the Messiah would not be able to come to this world', Satan tried to destroy the entire Jewish dynasty through persons like Haman!

It is to be noted that during World War II, some 60 lakh Jews were killed by Hitler and some others. In this aspect, Hitler was like the Second Haman! It is factual that we shall be destroyed if we try destroying others! Haman fell into the same pit that he dug!

Even if one million Haman arrived, the Lord would have prepared a single Esther!Despite the Royal Seal was put, the end was changed through Esther (She was the Seal created by the King of Kings)!

Even after knowing about the Royal Seal that says "except the King, one shouldn't worship anyone", Daniel kneeled before the Heavenly God. He knows whose king is great. Is it not? The King who put the Seal lost his sleep! Those who were the reason for the Seal became the prey for the  Lion's!

More than the Seals of the Wordly Kings, the Seal of the King of Kings shall operate through our knees even today. We are not there to fear about the government or the authorities of the world but to be used by the King of Kings!

If there are obstacles, there comes the Army of Angels too! Amen!
_____________________________

Built a Heavenly Father's Relationship!

*Built a Heavenly Father's Relationship!*

Abba Father...
1. Call you
2. Consult you
3. Comfort you
4. Care for you 
5. Caution you
6. Communicate with you 
7. Complete guidance to you!!

*Only the true relationship is constant for ever and ever!*

*BIBLE:*

*ரோமர் 8: 15*
*அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.*

Romans 8: 15
For ye have not received the spirit of bondage again to fear; but ye have received the Spirit of adoption, whereby we cry, Abba, Father.!!.

சிந்தனைக்கு

*சிந்தனைக்கு*👇

*சாவி* இல்லாத
பூட்டை மனிதன்
உருவாக்குவதில்லை...💁🏻‍♂

அதுபோல் *தீர்வு* 
இல்லாத 
பிரச்சனைகளை இறைவனும்
அனுமதிப்பதில்லை...🗣🗣🗣

நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்

*'நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்'* 
(ஏசாயா 26:7) 

நீதிமான் இந்த உலகத்தில் கடந்துபோகும் பாதை கரடுமுரடானது. இவைகள் ஒன்றும் புதிதல்ல. இவைகள் தேவனால் நியமிக்கப்பட்ட வழிகள், பாதைகள். இந்த பாதையை ஒவ்வொரு அடியிலும் தேவன் நமக்காக செம்மைப்படுத்துகிறார் என்று சொல்லப்படுகிறது. உன் பாதை எவ்வளவு கரடுமுரடானதாகக் காணப்பட்டாலும், கால் இடறும் என்று சொல்வதற்கு ஏதுவானதாக இருந்தாலும் நீ ஒருபோதும் கலங்காதே, திகையாதே. உன் பாதைகளை செவ்வைப்படுத்துகிறவரை நோக்கியே உன் கண்கள் இருக்கட்டும். அநேகவேளைகளில் உன்னுடைய ஒரு அடி மாத்திரம் செவ்வைப்படுத்தப்படும். அடுத்த அடியை விசுவாசத்தோடு நீ எடுத்து வைக்கும் போது அதற்குண்டான பாதையும் கர்த்தரால் செம்மைப்படுத்தப்படுகிறது என்பதைக் காணமுடியும். ‘குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும் கோணலை செவ்வையுமாக்குவேன், இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்’ (ஏசாயா 42 : 16 ). நீங்கள் போகும்பாதை உங்களுக்குப் புதிதாக இருக்கலாம், இதுவரை அவ்விதமான வாழ்க்கைப்பாதையில் கடந்து செல்லாத வழியாக இருக்கலாம். ஆனாலும் சோர்ந்து போகாதிருங்கள். ஏனென்றால் தேவன் உங்களை அவ்விதமாக வழிநடத்துவார் என்பதை அறிந்து உணருங்கள். மேலும் உங்கள் பாதை வெளிச்சமற்றதாக, இருளாக இருக்கலாம். உங்களுக்கு முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறியக்கூடாத இருளாக இருக்கலாம். அடுத்தது என்ன நடக்கும் என்பதை யூகிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் நம்பிக்கையோடே முன்னேறுங்கள். அவர் இருளை வெளிச்சமாக்குவார். பாதை கோணலாக இருந்தாலும் அதைச் செவ்வையாக்குவேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிற தேவன் அவ்விதம் செய்வார் என்று நம்பு. நிச்சயமாய் தேவன் அவ்விதம் செயல்படுவதை நீ காண்பாய்.   

This Devotion was shared from Tamil Christian Daily Devotion App. 
Download from Playstore.
 http://bit.do/dailydevotion

அன்றன்றுள்ள அப்பம் ஜுன் 13 புதன் பாபிலோனி ஆவிகள்!

அன்றன்றுள்ள அப்பம்
ஜுன் 13 புதன்
பாபிலோனி ஆவிகள்! 

"ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும் இச்சித்து எடுத்துக்கொண்டேன்" (யோசு. 7:21).

"பாபிலோனிய ஆவிகள்" என்றால், "குழப்பம், தாறுமாறு, இச்சித்து தூண்டி விடுதல்" என்பதெல்லாம் அர்த்தமாகும். "பாபிலோன்" என்ற வார்த்தை, "பாபேல்" என்ற வார்த்தையிலிருந்து, வந்ததாகும். வேதம் சொல்லுகிறது, "பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர், அவ்விடத்தில் தாறுமாறாக்கின படியால், அதின் பேர் "பாபேல்" என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை, அவ்விடத் திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்" (ஆதி. 11:9). 

முதலில், "பாபேல்" என்று வழங்கினது, யோசுவாவின் காலத்தில், பாபிலோன் என்று வழங்கப்பட்டது. நேபுகாத்நேச்சார், பாக்தாத்தைத் தன்னுடைய தலைநகர மாக்கி, பிரசித்திப் பெற்றதாக்கினார். நம்முடைய காலத்தில், சதாம்உசேன், அதே பாபிலோன் தேசத்தை எடுத்து, கட்டுவிப்பேன். நான் "நேபுகாத்நேச்சாரின் சந்ததி" என்று, முழங்கினார். இன்றைக்கும் பாபிலோன் தேசம், "ஈராக்" என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகரம், "பாக்தாத்" பட்டணமாகும். 

வேதம் முழுவதையும், நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், இங்கே இரண்டு பட்டணங்கள் முக்கியமானதாயிருக்கும். ஒன்று, இஸ்ரவேல் தேசத்திலுள்ள "எருசலேம்" நகரம். அதற்கு "சமாதானத்தின் நகரம்" என்று அர்த்தம். அடுத்தது, பாபிலோன் தேசத்திலுள்ள, "பாக்தாத்" என்ற பட்டணம். அதற்கு, "குழப்பம், தாறுமாறு" என்று அர்த்தம். 

இரண்டு பட்டணங்களுக்குமிடையே, உள்ளூர ஒரு போர், அல்லது போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறதைக் காணலாம். பல முறை, எருசலேம், பாபிலோனை வென்றது. சில முறை, பாபிலோன், எருசலேமை வென்றதினாலே, இஸ்ரவேலரை எழுபது வருடங்கள் அடிமைப்படுத்தி, சிறையிருப்பிலே வைத்திருந்தது, ஒவ்வொரு விசுவாசிகளுக்குள்ளும், எருசலேமுக்கும், பாபிலோனுக்கும் உள்ளூர, ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. 

சாத்தான், பாபிலோன் பக்கம் நின்று, தேவ ஜனங்களுக்குள் குழப்பத்தையும், தாறுமாறுகளின் ஆவியையும் புகுத்துகிறான். ஆனால் கர்த்தரோ, எருசலேம் பட்சமாய் நின்று, அமைதியையும், தேவ சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டு வருகிறார். நீங்கள், எப்பொழுதும் எருசலேம் பட்சமாக, அதாவது கர்த்தரோடு இருப்பீர்களென்றால், எல்லாப் புத்திக்கும் மேலான, தேவ சமாதானம், உங்களுடைய உள்ளத்திலே நிலவும்.

இன்றைக்கு, அநேக வீடுகளில் குழப்பங்களும், தாறுமாறுகளும் இருக்கின்றன. வீட்டை ஒழுங்காக, சுத்தமாக, அழகாக வைக்கமாட்டார்கள். பிள்ளைகளும், ஒழுங்கை மீறி, காலையிலே எழும்ப மாட்டார்கள். பல் விளக்க மாட்டார்கள். மனம்போன போக்கிலே, தாறுமாறாய் நடப்பார்கள். இன்றைக்கு "ஹிப்பி" என்ற இயக்கம், உலகமெங்கும் மீண்டும் எழும்பி இருக்கிறது. "சட்ட திட்டங்களுக்கு, நாங்கள் கீழ்ப்படியமாட்டோம். மனம்போல வாழுவோம்" என்கிறார்கள். இந்த பாபிலோனிய ஆவிகளுக்கு நீங்கள் விடுபட்டு, கர்த்தரண்டை வாருங்கள். "நானும், என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்று பொருத்தனைப் பண்ணுங்கள். "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப். 16:31).
நினைவிற்கு:- "இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்" (ஏசா. 8:18). 

சகோ. J. சாம் ஜெபத்துரை

ஏசாயா 30 :19

இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். 

ஏசாயா 30 :19