Blogger created for serving to god through Whatsapp. Gods child's can copy and share blog messages through Whatsapp. Praise the Lord. Amen Amen Amen....!!!

24 Feb 2017

விசுவாச அறிக்கை

விசுவாச அறிக்கை

தேவனுடைய பிள்ளைகளும் சுதந்திரவாளிகளும்

1. ரோமர் 8 : 17
நான் தேவனுடைய பிள்ளையும் தேவனுடைய சுதந்திரமுமாய் இருக்கிறேன் . நான் கிறிஸ்துவுக்குள் உடன் சுதந்திரன்.

2. ரோமர் 8 : 16
நான் தேவனுடைய பிள்ளையாய் இருக்கிறேன் என்று ஆவியானவர் தாமே என்னுடைய ஆவியோடே கூட சாட்சிகொடுக்கிறார் . ஆகையால் நான் அநாதை அல்ல .  நான் திக்கற்றவன் அல்ல . வானத்தின் கீழே நான் தனிமையானவன் அல்ல.

3. ரோமர் 9 : 26
நான் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படுகிறேன்.

4. எபேசியர் 5 : 1
நான் தேவனுக்கு பிரியமான பிள்ளை.

5. எபேசியர் 5 : 8
நான் கர்த்தருக்குள் வெளிச்சமாய் இருக்கிறேன்.  நான் வெளிச்சத்தின் பிள்ளையாய் நடந்து கொள்கிறேன்.

ஆமென்.

ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்.

ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்.

கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அங்கிள்... அங்கிள்....
என்னம்மா?????  கடைக்காரர் பரிவுடன் கேட்டார்....
அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள் 
prescription கொண்டுவந்தாயா  குழந்தை????
அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது....  அப்படின்னா????
எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள்.
"காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது.
சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன?????
குழந்தை மென்று விழுங்கி சொன்னது 

" மெரிக்கள்"
கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார்.
நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு?????

மெரிக்கள் அங்கிள்...
அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது?????

குழந்தை கண்ணீருடன் சொன்னது....

டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது.

அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார்.

அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார்.
வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம்  விவரத்தை கேட்டு அறிந்தார்.
அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்.....
டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற 
அதற்க்கு மருத்துவர் 

இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம்.
எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த  நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்.

பெண்களிடம்_இருக்க_வேண்டிய_சிறந்த_பண்புகள்

#பெண்களிடம்_இருக்க_வேண்டிய_சிறந்த_பண்புகள் 

1)  அதிகாலையில் எழும்ப வேண்டும் 
நீதி 31:15

2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதி 31:20

3) கணவா் சாட்சி கொடுக்க வேண்டும் - நீதி 31:29

4) தேய்வ பயம் இருக்க வேண்டும்  - நீதி 31:30

5) குணசாலியாக இருக்க வேண்டும் - நீதி 12:4

6)  புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும் - நீதி 12:4

7) நல்லொழுக்கம் இருக்க வேண்டும் - நீதி 11:16

8)கணவரிடம் பயபக்தி யாய் இருக்க  வேண்டும் - எபேசி 5:33

9) அமைதியாக இருக்க  வேண்டும் - 1 பேது 3:4

5) புருஷருக்கு கீழ்படிய வேண்டும் - கொ 3:18

10) அடக்கமுடையவளாக இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:11

11) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த  கூடாது  - 1 தீமோ 2:12

12) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்  - 1 தீமோ 2:10

13) தெளிந்த புத்தி இருக்க வேண்டும் - 1 தீமோ 2:10

14) நற்கிரியைகள் செய்ய வேண்டும் - 1 தீமோ 2:10

15) தேவ பக்தி இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:10

16) விசுவாசம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

17) அன்பு இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

18) பரிசுத்தம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

19) கோபக்காரியாக இருக்க கூடாது  நீதி:21:19

20) சண்டைகாரியாக இருக்க கூடாது நீதி:21:19

21) புத்தி இருக்க வேண்டும் - நீதி 14:1

22) ஆவிக்குறிய வீட்டை கட்ட வேண்டும் - நீதி 14:1

💁🙋💁🙋💁🙋💁

கனவுகள் இருந்தும் சிறைச்சாலை தான் வாழ்க்கையோ என்றிருந்த #யோசேப்பை தேசத்தின் அதிபதியாய் உயர்த்தின கர்த்தர்;

கனவுகள் இருந்தும் சிறைச்சாலை தான் வாழ்க்கையோ என்றிருந்த #யோசேப்பை தேசத்தின் அதிபதியாய் உயர்த்தின கர்த்தர்;

தரிசனத்தை மறந்து 40 வருடங்களாய் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த #மோசேயை தலைவனாய் உயர்த்தின கர்த்தர்; 

உண்டாக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இச்சையினால் விழுந்துபோன #சிம்சோனைக் கொண்டு பெலிஸ்தியரை அழித்த கர்த்தா்;

நினிவேக்குச் செல்லாமல் தர்ஷீசுக்கு வழிமாறி சென்ற #யோனாவை மீனைக்கொண்டு திரும்பிவரசெய்து நினிவேயில் எழுப்புதலை கொண்டுவந்த கர்த்தர்;

இன்றும் ஒருவேளை மாதங்களோ வருடங்களோ ஆகியும் உனக்கு கொடுத்த தரிசனங்கள், கனவுகள், வாக்குத்தத்தங்கள் நிறைவேறாமல் தத்தளித்து கொண்டிருந்தால் திகையாதே, கலங்காதே! உன்னை இலட்சிய கரை சேர்க்க அதற்கான  வழிகளை அறிந்தவர் நிச்சயமாய் செய்து முடிப்பார். 
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை  நிறைவேற்ற தீவிரிக்கிறார். 
வெற்றி நிச்சயம்! விடுதலை சத்தியம்!!

பகிர்வு செய்தி

_*இயேசு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை யாயிருக்கிறீர்களா?*_

_*இயேசு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை யாயிருக்கிறீர்களா?*_

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வரப்போகிறார் என்பதில் நீங்கள் நம்பிக்கையோடு உறுதியாயிருக்கிறீர்களா? அவர் இந்த பூமிக்கு நியாயம் தீர்க்கப்போகிறார் என்பதில் உறுதியாயிருக்கிறீர்களா? 
அப்படியானால் நீங்கள் கீழ்க்கண்ட குணங்களை உடைய் வாழ்க்கையை வாழ வேண்டும்.

1. அன்பு நிறைந்தவர்களாய் வாழ வேண்டும். 

தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. 
(1 யோவான் 2 :10)

2. ஆவியில்  எளிமையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (மத்தேயு 5: 3)

பணம் படைத்தவராய் இருக்கலாம் ஆனாலும் ஆவியில் எளிமை வேண்டும்.  லோத்தின் மனைவிக்கு உள்ளத்திலே பொருளாசை இருந்தது. அப்படியிருக்கக்கூடாது. 
ஆத்துமா வாழ்கிறதுபோல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்தாலும் ஆவியில் எளிமை வேண்டும். 

3. பாவத்தை பார்த்து துயரப்படுபவர்களாக இருக்க வேண்டும். ( மத்தேயு 5: 

லோத்து ஆத்துமாக்களுக்கு கண்ணீர் விட்டார். 

4. சாந்த குணமுள்ளவராயிருக்க வேண்டும்.  (மத்தேயு 5: 5)

இது ஆட்டுக்குட்டியானவரின் சுபாவம். மயிர் கத்தரிக்கிற ஆட்டுக்குட்டிபோல் வாயைத்திறவாதிருந்தார். (ஏசா 53: 4-5)

5: நீதியிமேல் பசி தாகம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். 
(மத்தேயு 5: 6)

6. இரக்கமுள்ளவர்களாய் இரக்கம் காட்ட வேண்டும். (மத்தேயு 5: 4)

பிறருடைய பாவங்களை மன்னிக்க வேண்டும். 

7. பரிசுத்தம் உள்ளவர்களாய் வாழ வேண்டும்.  (மத்தேயு 5: 8)

8. சமாதானமாக இருக்க வேண்டும்.  
     (மத்தேயு 5: 9)

போட்டி பொறாமையில்லாமல் பிறரோடு  இருக்க வேண்டும். 

9.கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாய் வாழ வேண்டும்.

உலகமே வெந்து அழியப்போகிறது, அதனால் தேவ பயத்தில் வாழ வேண்டும். 

10. ஆயத்தத்தோடு காத்திருக்கனும். 

வருவேன் என்றவர் வருவார்.  எந்த நேரமாயிருந்தாலும் ஆயத்தமான வாழ்க்கை வாழ வேண்டும். 

11. எஜமானின் வருகைக்கு வருவாரென்று ஆயத்தமாக இருக்க வேண்டும். இது முக்கியமாக  ஊழியக்காரருக்கு. 

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 

(வெளிப்படுத்தின விசேஷம் 3 :20)

12. உங்களுடைய  அழைப்பை, பெற்ற வரங்களை உறுதியாய் காத்துக் கொள்ள வேண்டும்.

*எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.*
(1 பேதுரு 4 :7)
~SSS~

எனக்கு சாட்சி பகருகிறவரே ஸ்தோத்திரம்

1. எனக்கு சாட்சி பகருகிறவரே ஸ்தோத்திரம்.
2.எனக்கு முன்பாக கடந்து போகிறவரே ஸ்தோத்திரம்.
3. என் நியாயாதிபதியே ஸ்தோத்திரம்.
4. சர்வலோக நியாயாதிபதியே ஸ்தோத்திரம்.
5. நீதிபரர் இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம்.
6. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவே ஸ்தோத்திரம்.
7.நசரேயனாகிய இயேசுவே ஸ்தோத்திரம்.
8. பரிந்து பேசும் கிறிஸ்துவே ஸ்தோத்திரம்.
9. அதிசயமானவரே ஸ்தோத்திரம்.
10.ஒருவராய்ப் பெரிய அதிசயங்களை செய்கிறவரே ஸ்தோத்திரம்.
  ஆமேன் அல்லேலூயா...