விசுவாச அறிக்கை
தேவனுடைய பிள்ளைகளும் சுதந்திரவாளிகளும்
1. ரோமர் 8 : 17
நான் தேவனுடைய பிள்ளையும் தேவனுடைய சுதந்திரமுமாய் இருக்கிறேன் . நான் கிறிஸ்துவுக்குள் உடன் சுதந்திரன்.
2. ரோமர் 8 : 16
நான் தேவனுடைய பிள்ளையாய் இருக்கிறேன் என்று ஆவியானவர் தாமே என்னுடைய ஆவியோடே கூட சாட்சிகொடுக்கிறார் . ஆகையால் நான் அநாதை அல்ல . நான் திக்கற்றவன் அல்ல . வானத்தின் கீழே நான் தனிமையானவன் அல்ல.
3. ரோமர் 9 : 26
நான் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படுகிறேன்.
4. எபேசியர் 5 : 1
நான் தேவனுக்கு பிரியமான பிள்ளை.
5. எபேசியர் 5 : 8
நான் கர்த்தருக்குள் வெளிச்சமாய் இருக்கிறேன். நான் வெளிச்சத்தின் பிள்ளையாய் நடந்து கொள்கிறேன்.
ஆமென்.
No comments:
Post a Comment