Blogger created for serving to god through Whatsapp. Gods child's can copy and share blog messages through Whatsapp. Praise the Lord. Amen Amen Amen....!!!

12 Jun 2018

இன்றைய தியானம் : 12:06:201

*இன்றைய தியானம் : 12:06:2018*
*கர்த்தர் இயேசுவின் இரண்டாம்(பகிரங்க) வருகையும் நியாயத்தீர்ப்பும் POST - 1*
*ஆசிரியர் முன்னுரை:-*

*"அவர் (இயேசு) வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்." சங்கீதம் 96:13*

        *"ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்." (2கொரிந்தியர் 5:10)*

      *"இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்." வெளி 1:7.* 

        *கர்த்தருடைய வேதாகமம், தேவத்திட்டங்களை மனுக்குலத்திற்கு திட்டமும் தெளிவுமாக அறிவிக்கிறதாய் இருக்கிறது. அந்தந்தக்கால ஆவிக்குரிய வெளிச்சத்தின்படி வாழ்ந்து பூரண பரிசுத்தவான்களானவர்களை தேவன் தன்னோடு சேர்த்துக் கொண்டார். "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார்." ஆதியாகமம் 5:24 "அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது, எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்." 2 இராஜாக்கள் 2:11.*

         *அந்தந்த வேதாகம காலங்களில் வெளிப்பட்ட தேவனுடைய கட்டளைகள் கற்பனைகளைக் கைக்கொள்ளாதவர்களை தேவன் நியாயந்தீர்த்தார். "உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்." ஆதியாகமம் 4:11. "பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான். " 2 இராஜாக்கள் 5:26,27. இவ்வசனங்களின் படி காயினும், கேயாசியும் நியாயந்தீர்க்கப் பட்டார்கள்.*

           *கிருபையின் கால தேவ ஆவியானவரும் வாக்கு பண்ணியிருக்கிறார்."ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.  பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1தெசலோனிக்கேயர் 4:16,17.*

         *"இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." வெளி 22:12*

           *தேவனுடைய பிள்ளைகளே, வேதாகம காலங்களாகிய மனசாட்சி, நியாயப்பிரமாணம், கிருபையின் காலம் ஆகிய எக்காலமானாலும் அந்தந்த காலங்களில் வாழ்ந்த பூரண பரிசுத்தவான்களை தன்னோடு சேர்த்துக்கொண்டும், பாவிகளை நியாயந்தீர்த்து தண்டிக்கிறதையும் காண்கிறோம். கிருபையின் காலம் முடியும் வேளையில் இக்கால பரிசுத்தவான்களை உலகம் அறியாத நிலையில் தேவ எக்காளத்தோடு இரகசியமாய் திருடனைப் போல ஆகாய மட்டும் வந்து தன்னோடு சேர்த்துக் கொள்ளப்போகிறார்.*

       *ஆயிரவருட அரசாட்சி, அதன் பின்பு சாத்தானின் கொஞ்ச காங்கிரஸ் ஆட்சி, உறுதியான அர்மகெதோன் யுத்தத்தில் தேவாதி தேவனாகிய இயேசு பாவிகளை நிநாயத்தீர்ப்புச் செய்யும் நியாயாதிபதியாய் வந்து சாத்தான், பூமி, வானம், சமுத்திரம், மரணம், பாதாளம் யாவற்றையும் நியாயந்தீர்த்து, "பாவிகளை இரண்டாம் மரணமாகிய அக்கினிக்கடலிலே தள்ளிப்போட (வெளி.20:14) உலகத்தின் இறுதி இமைப்பொழுதில் வரப் போகிறார்.*

        *ஆண்டவரின் இரண்டாம் வருகை யானது,  மரித்த பாவிகளை நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாகவே வரும் வருகையாக இருக்கப் போகிறது. ஏனென்றால் அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு இறுதியில் நடந்த "இரகசிய வருகை" , பூமியில் வாழ்ந்த பூரண பரிசுத்தவான்கள் யாவரையும் மணவாட்டியாய் தன்னோடு சேர்த்துக் கொண்டு விட்டார். ஆகையால் பூமியில் வாழ்கிற யாவரும் பாவிகளே.*

*இந்தப் பாவிகளை நியாயந்தீர்க்க வரும் இயேசுவின் இரண்டாம் வருகையானது எத்தன்மை கொண்டதாக இருக்கும். பூமி,வானம்,சமுத்திரம், பாவிகள், மரணம், பாதாளம், யாவற்றின் நிலைகள் எப்படியிருக்கும். வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்பிற்காக எழுந்திருக்கும் 6,7,உயிர்த்தெழுதல்கள், பாவிகளுக்கு கிடைக்கும் வித்தியாசமான தண்டனைகள். அக்கினிக்கடல், நித்தியம் யாவற்றையும் தேவத்திட்டங்களை வேத வசன ஆதாரங்களோடு தேவ ஆவியானவரால் அறிவிக்கப்பட்ட புஸ்தகமே, "கர்த்தர் இயேசுவின் இரண்டாம்(பகிரங்கை) வருகையும் நியாயத்தீர்ப்பும்," என்ற இப்புத்தகம்.*

              *ஆண்டவர் இயேசுவின் வருகைகளைக் குறித்து வேத பண்டிதர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் இக்கடைசிக்காலத்தில் கர்த்தருடைய வருகைகளாகிய."இரகசிய வருகை" "கர்த்தர் இயேசுவின் இரண்டாம் (பகிரங்க) வருகையும் நியாயத்தீர்ப்பும்", என்ற இரண்டு வருகைகளே உண்டு என்பதைக் குறித்த தேவத்திட்டங்களை வேதவசனங்களைக் கொண்டு ஆவியானவரின் உதவியால் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. வேதப்பண்டிதர்களிடையே காணும் வேறுபட்ட கருத்துக்களுக்கு இப்புத்தகம் தெளிவான தீர்வாக அமையும் என்று அன்பர் இயேசு கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன். ஆவிக்குரிய தேவனுடைய பிள்ளைகள் இப்புத்தகத்தை வாசித்து கடைசிக்கால தேவத்திட்டங்களை அறிந்து மணவாளன் இயேசுவை சந்திக்க பூரண பரிசுத்தமடைந்த மணவாட்டிகளாய் ஆயத்தப்பட அன்பின் ஆண்டவர் இயேசு அழைக்கிறார். இயேசுவே வாரும்! ஆமென். அல்லேலூயா!*

*கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலன் ,*
*I. ஆசீர்வாதம்*
*"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"*


|The WORD| *ராஜாவா? ராஜாதிராஜாவா?*

|The WORD| *ராஜாவா? ராஜாதிராஜாவா?*

ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். (எஸ்தர் 4:3 )

*ஆண்டவர் தமது ஜனங்களை எப்படியாவது காப்பாற்றுவது
நிச்சயம் . அதற்காக அவர் எப்படியாவது திட்டம் தீட்டுவார். அதற்கு, யாரை வேண்டுமானாலும், உபயோகப்படுத்துவார்!*

யூதகுலத்தை எப்படியாவது அடியோடு அழித்து விட்டால்,
மேசியா இவ்வுலகிற்கு வரமுடியாது என்று, ஆமான் போன்ற நபர்கள் மூலம் யூத வம்சம் அனைத்தையும் அழிக்க முயற்சித்தான் சாத்தான்!

அது போலவே இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது
ஹிட்லர் மற்றும் சிலர் மூலமாக சுமார் 60 லட்சம் யூதர்களை அழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் ஹிட்லர் இரண்டாவது
ஆமான் போல! மற்றவர்களை அழிக்க நாம் நினைத்தால் நாம் அழிந்து போவோம் என்பது நியதி! ஆமான் தான் வெட்டிய குழியில் தானே விழுந்தான்!

*ஒரு கோடி ஆமான்கள் வந்தாலும், ஒரே ஒரு எஸ்தரை கர்த்தர் முன்னமே ஆயத்தம் செய்திருப்பார்!* ராஜாவின் முத்திரை வைக்கப்பட்டாலும், ராஜாதி ராஜாவின் முத்திரையாகிய எஸ்தர், மூலமாக முடிவு மாறினது அல்லவா?

 அரசனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாதென ராஜாவின் முத்திரை வைக்கப்பட்டது என அறிந்தும் பரலோக ராஜாவை நோக்கி, முழங்கால்படியிட்ட தானியேலுக்குத் தெரியும் அல்லவா "எந்த ராஜா பெரியவர்" என்று! *முத்திரை வைத்த ராஜாவுக்கு நித்திரை போயிற்றே!* முத்திரைக்குக் காரணகர்த்தாக்கள் சிங்கங்களுக்கு இரையானார்களே! 

உலக ராஜாக்களின் முத்திரைகளைக் காட்டிலும், ராஜாதிராஜாவின் முத்திரையானது நம் முழங்கால்கள் வழியாக இன்றும் செயல்படும் அல்லவா? *நாம் உலக அரசாங்கங்களுக்கோ, அதிகாரங்களுக்கோ பயப்பட அல்ல, பரலோகத்தின் ராஜாதிராஜாவுக்கு பயன்படவே இருக்கிறோம்!* 

*தடைகள் வரும்போது, தேவதூதர் படைகளும் அனுப்பப்படுமே!* ஆமென்!
_______________

King or King of Kings?

Esther:4:3 – “And in every province where the king’s command and decree arrived, there was great mourning among the Jews, with fasting, weeping, and wailing; and many lay in sackcloth and ashes.”

It is certain that God shall somehow defend His people. To do so, he shall somehow design plans! And he uses anyone for this cause!

Knowing that 'if somehow the Jewish community is ruined, the Messiah would not be able to come to this world', Satan tried to destroy the entire Jewish dynasty through persons like Haman!

It is to be noted that during World War II, some 60 lakh Jews were killed by Hitler and some others. In this aspect, Hitler was like the Second Haman! It is factual that we shall be destroyed if we try destroying others! Haman fell into the same pit that he dug!

Even if one million Haman arrived, the Lord would have prepared a single Esther!Despite the Royal Seal was put, the end was changed through Esther (She was the Seal created by the King of Kings)!

Even after knowing about the Royal Seal that says "except the King, one shouldn't worship anyone", Daniel kneeled before the Heavenly God. He knows whose king is great. Is it not? The King who put the Seal lost his sleep! Those who were the reason for the Seal became the prey for the  Lion's!

More than the Seals of the Wordly Kings, the Seal of the King of Kings shall operate through our knees even today. We are not there to fear about the government or the authorities of the world but to be used by the King of Kings!

If there are obstacles, there comes the Army of Angels too! Amen!
_____________________________

Built a Heavenly Father's Relationship!

*Built a Heavenly Father's Relationship!*

Abba Father...
1. Call you
2. Consult you
3. Comfort you
4. Care for you 
5. Caution you
6. Communicate with you 
7. Complete guidance to you!!

*Only the true relationship is constant for ever and ever!*

*BIBLE:*

*ரோமர் 8: 15*
*அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.*

Romans 8: 15
For ye have not received the spirit of bondage again to fear; but ye have received the Spirit of adoption, whereby we cry, Abba, Father.!!.

சிந்தனைக்கு

*சிந்தனைக்கு*👇

*சாவி* இல்லாத
பூட்டை மனிதன்
உருவாக்குவதில்லை...💁🏻‍♂

அதுபோல் *தீர்வு* 
இல்லாத 
பிரச்சனைகளை இறைவனும்
அனுமதிப்பதில்லை...🗣🗣🗣

நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்

*'நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்'* 
(ஏசாயா 26:7) 

நீதிமான் இந்த உலகத்தில் கடந்துபோகும் பாதை கரடுமுரடானது. இவைகள் ஒன்றும் புதிதல்ல. இவைகள் தேவனால் நியமிக்கப்பட்ட வழிகள், பாதைகள். இந்த பாதையை ஒவ்வொரு அடியிலும் தேவன் நமக்காக செம்மைப்படுத்துகிறார் என்று சொல்லப்படுகிறது. உன் பாதை எவ்வளவு கரடுமுரடானதாகக் காணப்பட்டாலும், கால் இடறும் என்று சொல்வதற்கு ஏதுவானதாக இருந்தாலும் நீ ஒருபோதும் கலங்காதே, திகையாதே. உன் பாதைகளை செவ்வைப்படுத்துகிறவரை நோக்கியே உன் கண்கள் இருக்கட்டும். அநேகவேளைகளில் உன்னுடைய ஒரு அடி மாத்திரம் செவ்வைப்படுத்தப்படும். அடுத்த அடியை விசுவாசத்தோடு நீ எடுத்து வைக்கும் போது அதற்குண்டான பாதையும் கர்த்தரால் செம்மைப்படுத்தப்படுகிறது என்பதைக் காணமுடியும். ‘குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும் கோணலை செவ்வையுமாக்குவேன், இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்’ (ஏசாயா 42 : 16 ). நீங்கள் போகும்பாதை உங்களுக்குப் புதிதாக இருக்கலாம், இதுவரை அவ்விதமான வாழ்க்கைப்பாதையில் கடந்து செல்லாத வழியாக இருக்கலாம். ஆனாலும் சோர்ந்து போகாதிருங்கள். ஏனென்றால் தேவன் உங்களை அவ்விதமாக வழிநடத்துவார் என்பதை அறிந்து உணருங்கள். மேலும் உங்கள் பாதை வெளிச்சமற்றதாக, இருளாக இருக்கலாம். உங்களுக்கு முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறியக்கூடாத இருளாக இருக்கலாம். அடுத்தது என்ன நடக்கும் என்பதை யூகிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் நம்பிக்கையோடே முன்னேறுங்கள். அவர் இருளை வெளிச்சமாக்குவார். பாதை கோணலாக இருந்தாலும் அதைச் செவ்வையாக்குவேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிற தேவன் அவ்விதம் செய்வார் என்று நம்பு. நிச்சயமாய் தேவன் அவ்விதம் செயல்படுவதை நீ காண்பாய்.   

This Devotion was shared from Tamil Christian Daily Devotion App. 
Download from Playstore.
 http://bit.do/dailydevotion

அன்றன்றுள்ள அப்பம் ஜுன் 13 புதன் பாபிலோனி ஆவிகள்!

அன்றன்றுள்ள அப்பம்
ஜுன் 13 புதன்
பாபிலோனி ஆவிகள்! 

"ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும் இச்சித்து எடுத்துக்கொண்டேன்" (யோசு. 7:21).

"பாபிலோனிய ஆவிகள்" என்றால், "குழப்பம், தாறுமாறு, இச்சித்து தூண்டி விடுதல்" என்பதெல்லாம் அர்த்தமாகும். "பாபிலோன்" என்ற வார்த்தை, "பாபேல்" என்ற வார்த்தையிலிருந்து, வந்ததாகும். வேதம் சொல்லுகிறது, "பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர், அவ்விடத்தில் தாறுமாறாக்கின படியால், அதின் பேர் "பாபேல்" என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை, அவ்விடத் திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்" (ஆதி. 11:9). 

முதலில், "பாபேல்" என்று வழங்கினது, யோசுவாவின் காலத்தில், பாபிலோன் என்று வழங்கப்பட்டது. நேபுகாத்நேச்சார், பாக்தாத்தைத் தன்னுடைய தலைநகர மாக்கி, பிரசித்திப் பெற்றதாக்கினார். நம்முடைய காலத்தில், சதாம்உசேன், அதே பாபிலோன் தேசத்தை எடுத்து, கட்டுவிப்பேன். நான் "நேபுகாத்நேச்சாரின் சந்ததி" என்று, முழங்கினார். இன்றைக்கும் பாபிலோன் தேசம், "ஈராக்" என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகரம், "பாக்தாத்" பட்டணமாகும். 

வேதம் முழுவதையும், நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், இங்கே இரண்டு பட்டணங்கள் முக்கியமானதாயிருக்கும். ஒன்று, இஸ்ரவேல் தேசத்திலுள்ள "எருசலேம்" நகரம். அதற்கு "சமாதானத்தின் நகரம்" என்று அர்த்தம். அடுத்தது, பாபிலோன் தேசத்திலுள்ள, "பாக்தாத்" என்ற பட்டணம். அதற்கு, "குழப்பம், தாறுமாறு" என்று அர்த்தம். 

இரண்டு பட்டணங்களுக்குமிடையே, உள்ளூர ஒரு போர், அல்லது போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறதைக் காணலாம். பல முறை, எருசலேம், பாபிலோனை வென்றது. சில முறை, பாபிலோன், எருசலேமை வென்றதினாலே, இஸ்ரவேலரை எழுபது வருடங்கள் அடிமைப்படுத்தி, சிறையிருப்பிலே வைத்திருந்தது, ஒவ்வொரு விசுவாசிகளுக்குள்ளும், எருசலேமுக்கும், பாபிலோனுக்கும் உள்ளூர, ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. 

சாத்தான், பாபிலோன் பக்கம் நின்று, தேவ ஜனங்களுக்குள் குழப்பத்தையும், தாறுமாறுகளின் ஆவியையும் புகுத்துகிறான். ஆனால் கர்த்தரோ, எருசலேம் பட்சமாய் நின்று, அமைதியையும், தேவ சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டு வருகிறார். நீங்கள், எப்பொழுதும் எருசலேம் பட்சமாக, அதாவது கர்த்தரோடு இருப்பீர்களென்றால், எல்லாப் புத்திக்கும் மேலான, தேவ சமாதானம், உங்களுடைய உள்ளத்திலே நிலவும்.

இன்றைக்கு, அநேக வீடுகளில் குழப்பங்களும், தாறுமாறுகளும் இருக்கின்றன. வீட்டை ஒழுங்காக, சுத்தமாக, அழகாக வைக்கமாட்டார்கள். பிள்ளைகளும், ஒழுங்கை மீறி, காலையிலே எழும்ப மாட்டார்கள். பல் விளக்க மாட்டார்கள். மனம்போன போக்கிலே, தாறுமாறாய் நடப்பார்கள். இன்றைக்கு "ஹிப்பி" என்ற இயக்கம், உலகமெங்கும் மீண்டும் எழும்பி இருக்கிறது. "சட்ட திட்டங்களுக்கு, நாங்கள் கீழ்ப்படியமாட்டோம். மனம்போல வாழுவோம்" என்கிறார்கள். இந்த பாபிலோனிய ஆவிகளுக்கு நீங்கள் விடுபட்டு, கர்த்தரண்டை வாருங்கள். "நானும், என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்று பொருத்தனைப் பண்ணுங்கள். "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப். 16:31).
நினைவிற்கு:- "இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்" (ஏசா. 8:18). 

சகோ. J. சாம் ஜெபத்துரை

ஏசாயா 30 :19

இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். 

ஏசாயா 30 :19